பொகவந்தலாவை, லெட்சுமி மேற் பிரிவு தோட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
58 வயதுடைய நபர் ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை மாட்டு தொழுவத்தில் வைத்து சந்தேகநபர் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





