அனுராதபுரத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று!!

500

கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் யுவதி அனுராதபுரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் ஹிதேகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையாற்றி வரும் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான அறிகுறியை அடுத்து அந்த யுவதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கியிருந்து அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.