நாய் செய்த செயலால் தடுக்கப்பட்ட ப யங்கர கு ற்றச் செயல்!!

684

நாய்

நாய் ஒன்று செய்த வீர செயல் காரணமாக ப யங்கரமான கு ற்றச் செயல் ஒன்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மிரிஹான ஹெம்புல்தெனிய பிரதேசத்தில் வீதியில் சென்ற நாய் ஒன்று பொதி ஒன்றை கவ்வி செல்வதை வீதியில் சென்ற பொலிஸ் அதிகாரி கண்டுள்ளார்.

இந்த பொதி தொடர்பில் ச ந்தேகம் கொண்ட பொலிஸ் அதிகாரி அதனை ப ரிசோதித்த போது அதில் து ப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனடிப்படையில் மிரிஹான பொலிஸார் விசேட வி சாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் நாய் நடமாடிய பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி. கெமரா பதிவுகளை ப ரிசோதனை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரு நபர் சந்தேகத்திற்குரிய பொதி ஒன்றை மறைக்கும் விதம் சீ.சீ.டி.வியில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் மறைத்து வைத்த பொதியையே நாய் கவ்வி சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. து ப்பாக்கியை மறைத்து வைத்த ச ந்தேக ந பரை கைது செய்து வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர் அயல் வீட்டில் வசிப்போருடன் ஏற்பட்டுள்ள த ராறு காரணமாக ஏதேனும் கு ற்றச் செ யலில் ஈடுபட இந்த து ப்பாக்கியை ம றைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நடக்கவிருந்த ப யங்கரமான கு ற்றச் செ யல் எந்த பயிற்சியும் பெறாத கட்டாகாலி நாய் காரணமாக தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.