இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் : ஷேவாக் நம்பிக்கை!!

461

Sehwagமோசமான போம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு ஷேவாக் பேட்டி அளிக்கையில்,,

ஏழாவது ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் கலிஸ், யுவராஜ்சிங் போன்ற சிறந்த வீரர்களை வாங்க அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி என்னை மீண்டும் ஏலத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன்.

நானும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக நீண்ட நாட்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இந்திய அணிக்காக மீண்டும் தொடக்க வீரராக விளையாட முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.