வவுனியா வடக்கில் முதல் முறையாக இடம்பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!(படங்கள்)

605

வவுனியா வடக்கு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட  பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கான  முடிவுகளின் அடிப்படையில் பெறுபேறுகளின் அடைவு மட்டத்திற்கு பெரிதும் பங்காற்றிய  அதிபர்கள்  ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த  06.02.2020 வியாழக்கிழமை நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு ஆரம்பகல்வி பிரிவின்  ஏற்பாட்டிலும்  வவுனியா வடக்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி.அ.சுரேந்திரன்  தலைமையிலும்  இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி.அஞ்சலிதேவி சாந்தசீலன் (வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்) பிரதம விருந்தினராகவும் திரு.ச.சற்குணராஜா(ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வடமாகாண கல்வித் திணைக்களம்)சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வின் போது2018,2019 ஆம் ஆண்டுகளில்  புலமைபரிசில் பரீட்சையில்  மாணவர்கள் சிறப்பான பேறுகளை பெற்றுகொள்ள கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில்முழுமனதுடன் சேவையாற்றிய ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் செயல்பட்டு மகிழ்வோம்,சித்திர போட்டிகளில் தேசிய மற்றும்  மாகாண மட்டங்களில் சாதனை படைத்த  ஓமந்தை மற்றும் நெடுங்கேணி கோட்டத்திற்குட்பட்ட  பாடசாலைகளின் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  பதக்கங்கள்,சான்றிதழ்கள் ஆகியன வழங்கியும்  கெளரவிக்கபட்ட நிகழ்வும் முதன் முறையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

PHOTOS: