வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாட உள்ளது.
வங்கதேசத்துக்கு வருகிற 27ம் திகதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு 20- 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அரசியல் பிரச்னை காரணமாக அவ்வப்போது வங்கதேசத்தில் கலவரம் நடப்பதால் பாதுகாப்பு கருதி இலங்கை அணி, வங்கதேசம் செல்லுமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.
அங்குள்ள நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கிரிக்கெட் சபையிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதில் திருப்தி தெரிவித்து இருப்பதால், இலங்கை அணியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





