மக்கள் அசௌகரியம்

வவுனியாவில் இரண்டு இடங்களில் இரா ணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோ தனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌ கரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போ தைப்பொ ருட்கள் க டத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இச்சோ தனை சா வடிகள் அமைக்கப்பட்டு சோ தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதூர் மற்றும் ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச் சோ தனையின் போது பேருந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல் இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோ தனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டும் பேருந்தில் ஏறிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரவு நேரங்களில் தூர இடங்களுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சோ தனைகளின் போது போ தைப்பொ ருட்கள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் முக்கியமாக பெருந்தொகையான போ தைப்பொருள் க டத்தப்படும் மார்க்கங்கள் தொடர்பில் இதுவரை பா துகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தாது பயணிகளை அசௌகரியத்திற்குள்ளாக்குவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.




