கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய வெளிநாட்டு கணவன், மனைவி!!

696

போ லி குரேஷிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக ஐரோப்பா செல்ல முயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்த கணவன் மனைவியை அவர்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

39 வயதான ஈரான் ஆண் அந்நாட்டில் வர்த்தக கப்பல் மாலுமியாக சேவையாற்றிய நபர் எனவும் 34 வயதான அவரது மனைவி ஈரானிய பெண் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளார்.

இவர்கள் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து வந்த சலாம் எயார் விமானத்தில் இன்று காலை 8.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.

இலங்கையில் தேன் நிலவை கொண்டாட வந்த தம்பதிகள் போல் காட்டி நுழைவு விசாவை பெற விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரிடம் ஆவணங்களை சமர்பித்துள்ளனர்.

எனினும் அவர்கள் இலங்கையில் இறங்குவதற்காக அனுமதிப் பத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதை அவதானித்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்துள்ளனர்.

இதனால், பத ற்றமடைந்த அவர்கள் அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக குரேஷிய அடையாள அட்டைகளை சமர்பித்துள்ளனர்.

அதிகாரிகள் இந்த குரேஷிய அடையாள அட்டைகளை பரிசோதித்த போது, அவை சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படாத போ லியான அடையாள அட்டைகள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களின் கடவுச்சீட்டைகளை பெற்று அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அவையும் போலியானவை என தெரியவந்துள்ளது.

குரேஷியா தொடர்பாக அவர்களிடம் தகவல் விசாரித்த போது அவற்றுக்கு பதிலளிக்கவில்லை என்பதுடன் தாம் ஈரானியர்கள் எனக் கூறியுள்ளனர்.

தாம் தொழில் வாய்ப்பு தேடி ஐரோப்பாவுக்கு செல்வதாகவும் இந்த போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்க 2 ஆயிரம் யூரோக்கள் செலவானதாகவும் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக வி சாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இவர்கள் போலாந்து செல்ல விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்கான அனுமதியை மறுதித்து போலந்து அதிகாரிகள் கடவுச்சீட்டுகளில் முத்திரை பதித்துள்ளதை காணக் கூடியதாக இருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.