விமான நிலையம்

சீனர்களுக்கு உலகம் தனது கதவுகளை இறுக்க மூட ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து, சீனர்களின் அ வலநிலை தொடர்பான ஒரு காட்சி. சீனாவில் உருவான ‘கொரோனா வைரஸ்’ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து, சீனர்கள் உலகில் பெரிதாக நடமாட முடியாத ஒரு நிலை தோன்றிள்ளது. சீனர்கள் பெரும்பாண்மையாக நடமாடும் இடங்கள், குறிப்பாக விமான நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு நிலை உருவாகி உள்ளது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில், அங்கு மொத்தம் 2,571,000 சீனர்கள் வசித்து வருகின்றார்கள். சிங்கப்பூரின் மொத்த சனத்தொகையில் இது 76.2 %. சீனாவைக் கடந்து உலகில் இரண்டாவதாக சீனர்கள் பெரும்பாண்மை வீதத்தில் வாழும் தேசம் இதுதான்.

சிங்கப்பூரில் நல்ல நல்ல பதவி நிலைகளில் மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற ஒரு இனம்தான் சீன இனம். அப்படிப்பட்ட சிங்கப்பூருக்கே வரமுடியாத அல்லது சிங்கப்பூரில் இருந்து வேறு தேசங்களுக்குச் செல்லமுடியாத ஒரு நிலைக்கு சீனர்களை இந்த கொரோனா வைரஸ் கொண்டுவந்து விட்டுள்ளது.

உலகில் சீனர்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற மிக மிக இக்கட்டான நெருக்கடியை வெளிப்படுத்துகின்ற ஒரு காட்சி இது என்று கூறலாம். சிங்கப்பூர் என்கின்ற இந்த தேசம் பற்றி குறிப்பிடும் பொழுது, அங்கு வாழும் தமிழர்களைத் தவிர்த்துவிட்டு, சீங்கப்பூர் பற்றி கூறமுடியாது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுமார் நான்கு முதல் ஐந்து இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். சிங்கப்பூர் பிரஜைகளில் 9 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு சீங்கப்பூரில் தமிழும் ஒரு தேசிய மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கடந்து உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற பல தமிழ் நிறுவனங்கள் சிங்கப்பூரை மையப்படுத்தி தமது வியாபாரங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று வெறிச்சோடிக் காணப்படும் சிங்கப்பூர் விமான நிலையத்தின் காட்சியானது, ஒரு தொகை தமிர்களின் வியாபாரம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கின்ற சவால்கள் பற்றியும் எச்சரித்து நிற்கின்றது.




