நடிகை சமீரா ரெட்டி அவசரமாக இரகசிய திருமணம்?

413

Sameera Reddyவாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் வாடிய முகத்துடன் மீண்டும் மும்பைக்கே திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அப்போது அதனை மறுத்தார் சமீரா.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சமீராவுக்கும், தொழில் அதிபர் அக்ஷய் வர்தாவுக்கும் இரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் திருமணம் ஏப்ரலில் நடக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இப்போது திடீர் திருப்பமாக நேற்று அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.