வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம் : பொலிஸில் முறைப்பாடு!!

67


மாதா சொரூபம்


வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை வீதியில் வீடொன்றின் முன்பாக அமைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்று (10.02.2020) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் முன்பாக மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியினை உடைத்து மாதா சொரூபத்தினை இனந்தெரியாத நபர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.


மாதா சொரூபத்தின் மாயமனதினை கண்ட வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.