மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை!!

1069

இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை

மத்திய மலை நாட்டின் நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மழையின்மைக் காரணமாக மவுசாக்கலை மற்றும் காசல்றீ நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. நீர்மின்சார உற்பத்திக்கு இந்த இரண்டு நீர்தேக்கங்களுமே பிரதானமானவை.

இவற்றில் இருந்தே லக்சபான, நியூ லக்சபான, கென்யோன், விமலசுரேந்திர மற்றும் பொல்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையங்கள் தேசிய ரீதியில் மின்சாரத்தை விநியோகிக்கின்றன.

மவுசாக்கலை மற்றும் காசல்றீ நீர்தேக்கங்களில் நேற்று காலை 6 மணிக்கு முறையே 19.5 மற்றும் 19 அடி நீரே இருந்தமை அளவீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.