
மணிரத்னம் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்தார். 1997ல் இப்படம் வந்தது. அவர் இயக்கத்தில் குரு, ராவணன் படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், மகள் ஆரத்யா பிறந்த பிறகு படங்களில் ஐஸ்வர்யாராய் நடிக்கவில்லை. குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவிடுகிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை.
இந்த நிலையில் மணிரத்னம் இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி ஆகியோர் ஐஸ்வர்யாராயை சந்தித்து கதை சொல்லி உள்ளனர். இதில் மணிரத்னம் சொன்ன கதை மிகவும் பிடித்து போனதாம். எனவே இந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கதாநயாகனாக நடிக்கிறார். நாகார்ஜுனாவும் முக்கிய கரக்டரில் வருகிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகும் என தெரிகிறது.





