வவுனியா ஆடல் அணியினரின் குருசேத்திரம் ஆடற்கலை நிகழ்வு!!(படங்கள்)

327

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேலானந்தனின் நெறியாழ்கையில், வவுனியா ஆடல் அணியினர் வழங்கிய குருசேத்திரம் ஆடற்கலை கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக அமைச்சர் த.குருகுலராஜா, அமைச்சின் செயலாளர் மற்றும் தமிழ்காக்க பாடுபடும் தமிழ்நேசன் அடிகளார், வடமாகாண சபையின் உப தவிசாளர் அன்ரன் ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட ஆடற்கலை ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சுவைஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,

எமது மண்ணின் பெருமைகளில் ஒன்றாக இருக்கக் கூடியவரான கலைஞர் வேல்ஆனந்தனின் அவர்களின் பணி மிக நீண்ட பணி என்பது இங்கு பலரும் அறிந்த விடயம் அவர் உருவாக்கியுள்ள ஆடற்கலைப் பரம்பரை மிகப்பெரிது. அவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

அந்த தில்லையம்பலத்தானை நினைவுபடுத்துவதுபோல இங்கு எம்மோடு வேல் ஆனந்தன் இருக்கின்றார். இங்கு ஆடப்படும் குருசேத்திரம் அநேகமாக அனைவரும் விரும்பும் ஒரு சரித்திரம். அதை புத்தக வடிவிலோ அல்லது திரைப்படவடிவிலோ இப்படி ஆடற்கலை வடிவிலோ எல்லோரும் விரும்புகின்றார்கள்.

ஏனெனில் கீதையின் இருப்பிடம் கீதை பல்வேறு தத்துவங்களை சொல்கிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் என்பது கீதையின் வாசகம். இது எமக்கும் எமது இழப்புக்களுக்கும் ஈகங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகப்பொருந்தும்.

கர்ணனைபோல நாமும் இறுதிவரை கொடுத்துக் கொண்டே இருந்தோம். எனவே அந்த தர்மம் கர்ணனை இன்றுவரை உலகத்தில் நிலைக்க வைப்பதுபோல எம்மையும் எமது தர்மமும் நிலைக்க வைக்கும். தர்மத்தை சூதுகவ்வும் மீண்டும் தர்மம் தழைக்கும் என்பது வரலாறு.

கலைஞர் வேல் ஆனந்தன் நெறிப்படுத்தியிருக்கும் குருசேத்திரம் ஆடுபவர்களுக்கும் அதை ரசிக்கின்றவர்களுக்கும் நல்லுணறவை தரும். அதுவே கலையின் பண்பாகவும் இருக்கவேண்டும்.

எம்மால் பேணப்பட்டுவந்த கலைகளும் பாரம்பரியங்களும் பல்வேறு கலாசார ஒடுக்குமுறைகளால் நலிந்துவரும் இன்றைய காலத்தில் ஒரு சாரார் இதை பற்றிப் பிடித்து வளர்த்தெடுப்பது பாராட்டுக்குரியது.

வவுனியாவிலும் ஒரு கலைப்பண்பாடு மிகவும் ஆழமாக வேருன்றி சிறப்புற்றுவருவது மகழ்ச்சி தருவது. எனவே இன்றைய ஆடற்கலை விழாவின் பங்காளர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகின்றேன் என குறிப்பிட்டார்.

இங்கு வாழ்த்துரை வழங்கிய தமிழ்நேசன் அடிகளார் தனது உரையில்,

இந்த ஆடற்கலை நிகழ்வில் பாரம்பரிய கீழைத்தேய கருவிகளை கொண்டு செய்துகாட்டப்பட்ட போர்க்களக்காட்சி மிகவும் சிறப்பு என பாராட்டினார். மூச்சு நிற்பது மட்டுமல்ல மரணம் முயற்சி நிற்பதும் மரணம் என்றார்.

இந்த ஆடற்கலை சிறப்பானது. எனினும் கலைஞர் வேல் ஆனந்தன் போன்ற மாபெரும் கலைஞர்கள் எமது தமிழ்பண்பாட்டிற்கென ஒரு தனித்துவமான ஆடற்கலை உருவாக்க வேண்டும் தான் வேண்டுகோள் விடுவதாக குறிப்பிட்டார்.

இந்த ஆடற்கலை அரங்கில் தந்தை சிறையிருக்க மகன் இறந்த குடும்பத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கனடா தமிழ் உறவுகள் மாகாணசபை உப தவிசாளர் அன்ரன் ஜெகநாதன் ஊடாக வழங்கிய ஒரு தொகுதி பணத்தை பா.உறுப்பினர் சி.சிறீதரன் இறந்த சிறுவனின் சகோதரிக்கு வழங்கிவைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11