வவுனியாவில் மனித நேயமிக்கவர்களின் செயல் : முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட வயோதிபர்!!

15


வவுனியாவில்..


அநாதரவாக நீண்ட நேரமாக தனியார் வங்கி முன்பாக நின்ற முதியவர் ஒருவர் மீட்கப்பட்டு சமூக சேவை திணைக்களத்தின் உதவியுடன் சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் முன்பாக நீண்டநேரமாக தனிமையில் நின்றுகொண்டிருந்த, காலி – பரகொடகம பகுதியைச் செர்ந்த 76 வயதுடைய விஜய குணசிங்க என்ற வயோதிபரே இவ்வாறு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.


வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரனால் மாவட்ட சமூகசேவை திணைக்களத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.சீனிவாசனால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நோயாளர் காவுவண்டி மூலம், குறித்த முதியவர் அழைத்து செல்லப்பட்டு சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.