வவுனியாவில் பாடசாலை மாணவர்களை அ ச்சுறுத்தும் இளைஞர்கள் : கடும் சட்ட நடவடிக்கை!!

70


சட்ட நடவடிக்கை


வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை ப யமுறுத்தும் பாணியில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சில இளைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் நான்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை அ ச்சுறுத்தும் வகையில் செலுத்திய போது நேற்று போக்குவரத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிஸாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.