ஏய், ஜீன்ஸ், மன்மதன், கலகலப்பு 4 படங்களின் 2ம் பாகம் தயாராகிறது!!

456

2nd Editionஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் மோகம் தமிழ் பட உலகில் பரவி வருகிறது. அஜித் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா–2 என்ற பெயரிலும், சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்–2 என்ற பெயரிலும் வந்தது. நான் அவனில்லை, பீட்சா படங்களின் இரண்டாம் பாகமும் வெளிவந்தன.

தற்போது கமலின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நடிகர் அர்ஜூனும் தனது ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஜித்தன் ரமேஷ் நடித்த ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் ஏய், ஜீன்ஸ், மன்மதன், கலகலப்பு படங்களும் வருகின்றன.

ஏய் படத்தில் சரத்குமார்–நமீதா ஜோடியாக நடித்து இருந்தனர். ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்– ஐஸ்வர்யாராயும், கலகலப்பு படத்தில் விமல்–அஞ்சலியும் நடித்து இருந்தார்கள். மன்மதன் படத்தில் சிம்பு நடித்து இருந்தார். இந்த நான்கு படங்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தன. எனவே தான் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

இது போல் அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வீரம், கார்த்தி நடித்த சிறுத்தை படங்களின் இரண்டாம் பாகமும் தயாராக போவதாக செய்திகள் பரவி உள்ளன.