சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களின் தற்போதைய நிலை!!

464

சீனாவில் இருந்து..

கொரோனா வைரஸினால் பா திக்கப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரும் எதிர்வரும் 16ஆம் திகதி மருத்துவக் க ண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த முதலாம் திகதி சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு தியத்தலாவ இரா ணுவ முகாமில் அமைக்கப்பட்ட சிறப்பு க ண்காணிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இவர்களிடம் கொரோனாவைஸ் தொற்று இல்லை என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளமையை அடுத்தே அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை ச ந்தேகத்தின்பேரில் 15பேர் தொடர்ந்தும் அங்கொட, கண்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய, ராகம, குருநாகல் கம்பஹா, பதுளை மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் க ண்காணிக்கப்பட்டு வருவதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.