கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு : ஏற்றுக்கொள்ளுமா சீனா?

347

சுவாமிநாதன் விக்னேஷ்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விக்னேஷ் புதிய முகக் கவசமொன்றை கண்டுபிடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போதுவரை 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அ ச்சுறுத்திவருகின்றது. 1000 இற்கும் மேற்பட்ட உ யிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தினம் தினம் உ யிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் மற்றவர்களை பாதிக்காமல் இருப்பதற்காக முகக் கவசத்தை அணியும்படி சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த திருநகரில் காலனியைச் சேர்ந்த சுவாமிநாதன் விக்னேஷ் எனும் பட்டதாரி மாணவன் புதிய முகக் கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

விக்னேஷ் அன்றாடம் பயன்படுத்தப்படும் பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்தே புதியதாக முகக் கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இவர் கண்டுபிடித்த முகக் கவசம், பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி முகக் கவசத்தின் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக முகக் கவசத்தின் மீது ஒட்டவைத்தால் அதன் துகள்கள் 0.142 என்.எம். அளவுக்கு மட்டுமே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றாமல் இருக்கும் அந்த முகக் கவசத்தைப் பயன்படுத்தினால் 95 சதவீதம் தொற்றுவது குறையும் என்று தான் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வை Research Gate என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை அந்த இணையதளத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதை சீனா அரசு பரிந்துரைக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பொறியியல் பட்டதாரி விக்னேஷ் தெரிவித்துள்ளார்.