நான்கு வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய கடற்படை வீரருக்கு பிணை!!

658

Abuseதிருகோணமலை, குச்சவெளி திரியாய் பகுதியில் 4 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கடற்படை வீரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29.12.2013 அன்று கடற்படை வீரரால் 4 வயதுச் சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று குச்சவெளி நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த கடற்படை வீரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அடையாள அணிவகுப்பு இடம்பெற்றவேளை பாதிக்கப்பட்ட சிறுமியின் 12 வயதான சகோதரி குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளனர்.