வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மனைவி பலி, கணவர் படுகாயம்!!

19


விபத்தில்..


வவுனியா முருகனூர் பகுதியில் இன்று (14.02.2020) காலை 10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் கணவர் படுகாயமடைந்ததுடன் மனைவி ப லியாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக தெரியவருகையில்,முருகனூர் பகுதியிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் கணவன் (சாரதி) மற்றும் மனைவி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முருகனூர் பகுதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.


இவ் விபத்தில் மனைவி உ யிரிழந்ததுடன் கணவன் படுகாயமடைந்த நிலையில் 1990 அவரச அன்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


படுகாயமடைந்த 30 வயதுடைய கோவிந்தராசா கலைச்செல்வன் (கணவர்) விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் உயிரிழந்த 25வயதுடைய கலைச்செல்வன் தர்சினி (மனைவி) என்பவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கு வைத்தியசாலை பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த தர்சினி வயது 25 என்ற பெண்ணே உ யிரிழந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.