வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு!!

83


பாடல் வெளியீடு


ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் எங்கிலும் காதலர் தினம் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


குறித்த பாடல் வெளியீடு செய்யும் நிகழ்வு வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (14.02.2020) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது.


குறித்த பாடலின் இறுவட்டினை பாடல் ஆசிரியர் நிலா வெளியிட்டு வைத்தார். குறித்த பாடல் நிலா மற்றும் நிரோசன் ஆகியோரின் குரலில் பிரதீபனின் காணொளி உருவாக்கத்தில் கார்த்திக் எடிட்டிங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியை மட்டுமே பயன்படுத்தி குறித்த பாடலுக்கான காணொளி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.