வவுனியாவில் கிராமத்திற்கு தகவல் உரிமை : RTI நடமாடும் சேவை!!

497

RTI நடமாடும் சேவை

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் பெப்ரல் ( AFRIEL) இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை கருத்தரங்கு வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (14.02.2020) காலை நடைபெற்றது.



கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவையின் மூலமாக தகவல் சட்டம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தல் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கல் என்பன இடம்பெற்றன.

அத்துடன் தகவல் கோரும் படிவம் பூரணப்படுத்துதல் மற்றும் பொது நிறுவனங்களை உறுதியாக அடையாளம் காண்பது தொடர்பில் பிரசைகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.

ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , ஊடக அமைச்சின் உதவி செயலாளர் எம்.பி பண்டார மற்றும் ஊடக அமைப்பின் உயர் அதிகாரிகள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன்,

ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பின் ஊழியர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.