வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேச முன்னேற்ற நிலமைகள் தொடர்பாக ஆராய்வு!!

15


பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்


புதிய ஆண்டுக்கான முதலாவது வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும்,


அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வீட்டுத்திட்டம், மணல் அகழ்வு, வீதி புனரமைப்பு, காணி உறுதிப் பத்திரம் வழங்கல், நெற்கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.


குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் பிரேம்,

வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸார் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.