திருமணம் முடிந்த சில வினாடிகளில்..
திருமணத்தின் போது மணமகன் திடீரென தரையில் சரிந்து விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதன்பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது கணேஷ் திடீரென ம யங்கி தரையில் வி ழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், மா ரடைப்பு காரணமாக அவர் உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், திருமண ஊர்வலம் தாமதமாக துவங்கியது.
DJ ஒலி அதிகமாக இருந்ததால் அசாதாரணமாக உணர்ந்த கணேஷ் மயங்கி விழுந்து உ யிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.