எழுத்தாளர் ஜே.கே..

புலம்பெயர் எழுத்தாளர் ஜே.கே அவர்களின் கந்தசாமியும் கலக்சியும், என் கொல்லைப்புறத்துக் காதலிகள், சமாதானத்தின் கதைகள் இந்த மூன்று இலக்கிய படைப்புக்களும் எந்த வகையிலான விடயங்களை தெரிவிக்கின்றன என்ற கலந்துரையாடலும் அனுபவ பகிர்வும் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மண்டபத்தில் இன்று (15.02.2020) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது எழுத்தாளர் ஜே.கே அவர்களின் படைப்புக்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சந்தேகங்கள் மேலும் பல விடயங்கள் தொடர்பாக நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் வினாக்கள் எழுப்பப்பட்டதுடன் அதற்கு ஜே.கே பதில் வழங்கியிருந்தார்.

இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் , பேச்சாளர்கள், சமூக ஆர்வளர்கள், அரசியல் சார்ந்த செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





