இந்திய கடற்பரப்பில்..

இந்திய கடற்பரப்பில் இலங்கையர் மூவர் நேற்று இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து க டத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து பா துகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இராமேஸ்வரம் அடுத்து உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான ரோந்து ஹெலிக்கொப்டர் நேற்று இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது

இந்திய கடற்பரப்பில் ச ந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய விசை படகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகை நோக்கி ஹெலிக்கொப்டர் தாழ்வாக சென்றதை கண்ட இந்திய படகு அங்கிருந்த த ப்பி சென்றுள்ளது.

ஆனால் இலங்கை படகு அங்கிருந்து த ப்ப முடியாமல் இந்திய கடற்படையிடம் சி க்கியுள்ளது. நடுக்கடலில் சி க்கியவர்களை இந்திய கடற்படை வீரர்கள் படகையும் அதில் இருந்த 3 பேரையும் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு செல்லும்படி தெரிவித்தனர்.

ஆனால் படகில் இருந்தவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற போது இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிக்கொப்டரை தாழ்வாக செலுத்தி படகையும் அதிலிருந்த மூவரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு கொண்டு வந்து விட்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற தமிழக கடலோர காவல் குழு ஆய்வாளர் கனகராஜ் மற்றும் ராமேஸ்வரம் கடற்படை முகாம் கமென்டர் ஏ.கே தாஸ் படகில் இருந்த 3 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த லூவாஸ் அலோசியஸ், அந்தோனி சுகந், சகாய வினிஸ்ரோ என வி சாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்கள் இலங்கையில் இருந்த மீன்பிடிக்க வந்து எல்லை தெரியாமல் இந்திய எல்லைக்குள் வந்தனரா? அல்லது இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை க டத்தி வந்தனரா? அல்லது நடுக்கடலில் தமிழக விசை படகில் இருந்து பீடி இலைகளை வாங்குவதற்காக வந்த போது இந்திய கடற்படையிடம் சி க்கினரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவு துறை அதிகாரிகள் தீவிரமான வி சாரணை நடத்தி வருகின்றனர்.




