ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி!!

293

Sharukபிரபல நடிகர் ஷாருகான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நகரில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை சண்டைகாட்சி படமாக்கப்பட்டது.

அப்போது அவர் மீது கனமான பொருள் விழுந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே படப்பிடிப்பு குழுவினர் அவரை மும்பை நானவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

நடிகர் ஷாருகான் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ஷாருகானை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கும் தகவல் கிடைத்ததும் அவரது இரசிகர்கள் மருத்துவமனை அருகே அதிகமாக குவியத் தொடங்கினர். இதனால் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.