மைதானத்தில் சரிந்து அசைவற்றுக் கிடந்த இலங்கை வீராங்கனை : பயிற்சி ஆட்டத்தில் நேர்ந்த விபரீதம்!!

467

இலங்கை வீராங்கனை

அவுஸ்திரேலியாவில் தென் ஆபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது தலையில் பந்து தா க்கி மைதானத்தில் சுருண்டு விழுந்து அசைவற்றுக் கிடந்த இலங்கை வீராங்கனை உடல்நலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையைில், அதன் ஒரு பகுதியாக தென் ஆபிரிக்க-இலங்கை மகளிர் அணி இன்று அடிலெய்ட் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இதில், தென் ஆபிரிக்க அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டில் தென் ஆபிரிக்காவுடனான போட்டியின் போது, பிடிக்க முயன்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

போட்டியின் போது 29 வயதான தென் ஆப்பரிக்கா வீராங்களை சோலி ட்ரையன் அ டித்த பந்து அருகே பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அச்சினி குலசூரியா தலையில் தா க்கியது.

அடிபட்ட தரையில் சரிந்த குலசூரியா சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தார். இலங்கை வீராங்களைகள் உதவிக்கு விரைந்தனர்.

ஆம்புலன்ஸ் அதிகாரிகளால் சோ தனை செய்யப்பட்ட பின்னர், அவர் மைதானத்தில் இருந்து ஸ்டக்சரில் தூக்கிச் செல்லப்பட்டு மேலதிக சோ தனைகளுக்காக அருகிலுள்ள ராயல் அடிலெய்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர், ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது குலசூரியா உடல்நலம் குறித்த கேள்விக்கு இலங்கை அணி செய்தித் தொடர்பாளர் பதிலளித்ததாவது, பிற்பகலில் குலசூரியா மருத்துவமனையில் இருந்து திரும்பியதாக கூறினார்.

இதன் மூலம் வேகப்பந்து வீச்சாளர் அச்சினி குலசூரியாவும் க டுமையான காயம் ஏதும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.