யாழ். ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது!!

699

Arrestedஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரை நேற்றுக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

ஏழாலை வடக்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் ஜெயகிருஸ்ணா (33), ஈவினை கிழக்கைச் சேர்ந்த வரதராஜா அன்பரசன் (28) ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தி் பல வன்முறைச்சம்பவங்கள், கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஆவா குழுவின் தலைவரான வினோத் உட்பட 9 பேரை கடந்த 6ம் திகதி கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தக் குழுவிலிருந்து 02 புதிய கைக்குண்டுகள், 12 வாள்கள், 06 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த ஏனையவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.