உங்கள் உடல் எடையை 10 கிலோ வரை குறைக்க வேண்டுமா? இந்த அற்புத பானத்தை குடியுங்கள்!!

509


உடல் எடையை குறைக்கஉடல் எடையை குறைக்க வேண்டும் என்று இன்றும் பலர் அதற்காக எத்தனை வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர். எவ்வளவோ டயட் மற்றும் நேரத்தை செலவழித்து கடின உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையினை குறைக்க கஷ்டப்படுவதுண்டு.அதற்கு நேரம் செலவேயில்லாமல் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளமால் உடல் எடையினை இலகுவழியில் குறைக்க முடியும். அந்தவகையில் சமையலுக்கு பயன்படும் நீள கத்திரிக்காய் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை உடல் எடையை குறைக்க முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை : நீள ஊதா நிறக்கத்திரிக்காய் – 1,  எலுமிச்சை சாறு – 1,  நீர்- 4 கப். தயாரிக்கும் முறை :  முதலில் கத்திரிக்காயை வாங்கி சுத்தமாக கழுவ வேண்டும். சமையல் சோடா கலந்த நீரில் அலசினால் அதிலிருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் அழித்துவிடும். அதன் பின் இந்த கத்திரிக்காயை சிறு சிறு சதுர சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் தோலை எடுக்காமல் வெட்டிக் கொள்ள வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் ஒரு ஜாரில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு அதில் இந்த கொதித்த நீரை உடனே ஊற்றி மூடி முழுவதும் ஆறும் வரை அப்படியே வைத்திருங்கள். பின்னர் ஆறியவுடன் அந்த நீரில் ஃப்ரெஷான எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சில்லென்று ஆனவுடன் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதனால் உடல் எடை குறைக்க விரும்புவர்கள் வாரம் 3 நாட்கள் விடாமல் குறைத்தால் அற்புத பலன்கள் கிடைக்கும்.

கத்திரிக்காய் அதிக சத்துக்களை கொண்டது. கொழுப்பை வேகமாக கரைத்திடக் கூடியது. தினமும் இந்த நீரை குடித்து வந்தால் அதிகபடியான கொழுப்பு கரைந்து உடல் இளைக்க ஆரம்பிக்கும். ஏனைய நன்மைகள் : இந்த நீரில் விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. செல் சிதைவை தடுக்கும். இதய நலனை பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டும். இது நீர்ப்புத்தன்மை மற்றும் யைடூரிடிக் பண்பு அதிகம் பெற்றது. திசுக்களில் தங்கியிருக்கும் நீரை வெளியேற்றி மூட்டு இணைப்புகளில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காக்கின்றது.


இந்த நீர் மினரல்களான பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்றவற்றை உடலுக்கு அளிக்கின்றது. இதனால் நரம்பு மண்டலம் பலம் பெறுகிறது. மூளைக்கும் அதிக ஆற்றலை வழங்குகிறது.

பித்த நீர் சுரப்பை இந்த கத்திரிக்காய் நீர் தூண்டுவதால், உணவுக் குடல் மற்றும் இரைப்பையில் உருவாகும் கொழுப்பு செல்களை உடைத்து முழுவதும் கிரகிக்க உதவுகிறது. கத்திரிக்காயில் மிக அதிக நார்ச்சத்து உள்ளிதால் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல்களில் உருவாகும் நல்ல பாக்டீரியக்கள் வளர்ச்சியை தூண்டுகிறது.

மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும். ரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் இந்த கத்திரிக்காய் நீரை மருந்தாக சாப்பிடலாம். இது ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த நீரை எடுத்துக் கொண்டால் மனத் தளர்ச்சியை போக்கும். நரம்புகளை ஆசுவாசப்படுத்தி நன்மைகளை அளித்திடும்.