2017இல் பேஸ்புக்கின் கதை முடிவிற்கு வருகின்றதாம்!!

331

facebookஃபேஸ்புக் மீதான மோகம் 2017ஆம் ஆண்டுக்குள் வீழ்ந்துவிடும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இன்று முகநூல் பயனர்கள் நாள்தோறும் வளர்ந்து வருகிறார்கள். நமது எண்ணங்களை பகிரவும், நண்பர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்தப் பயன்பாடு துணை புரிகிறது. இதன் மீதான மோகமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஃபேஸ்புக்கில் செலவழிக்கும் நேரமும் அதிகரித்து வருகிறது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் 80 சதவீத பயனர்களை ஃபேஸ்புக் இழக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த மைஸ்பேஸ் வலைத்தளம், 2008ஆம் ஆண்டில் அதிக அளவிலான பயனர்களை வைத்திருந்தது. ஆனால் 2011ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் மூடப்பட்டு 35 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது.

அதே போன்ற நிலை ஃபேஸ்புக் வலைத்தளத்துக்கும் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.