கோடிக்கணக்கில் வருமானத்தை குவிக்கும் ஐபிஎல் போட்டிகள்!!

486

IPL

2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மட்டும் பிசிசிஐக்கு 385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது.

அணி ஒப்பந்தம், தொலைக்காட்சி விளம்பரம் உட்பட பல வழிகளில் பணத்தை அள்ளுகிறது. இதேபோல ஐ.பி.எல். போட்டி மூலமும் கனிசமான பணம் குவிகிறது.

2013ம் ஆண்டு நடத்தப்பட்ட 6வது ஐ.பி.எல் போட்டி மூலம் கிரிக்கெட் சபைக்கு 385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது.

சென்னையில் நேற்று நடந்த பி.சி.சி.ஐ.யின் நிதிக் குழுக் கூட்டத்தின் மூலம் இது தெரியவந்ததாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 210 கோடி கூடுதலாக லாபம் கிடைத்துள்ளது.