வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா – 2020

9


சிவராத்திரி பெருவிழா – 2020

சிவனடியார்களே!


இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வர தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அகிலாண்டேசுரப்பெருமானுக்கு நிகழும் விகாரி வருடம் மாசித் திங்கள் 09ம் நாள் (21.02.2020) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் விசேட அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் நடைபெற்று மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபபூசையும் தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன் முழு இரவும் சிவநாம வழிபாடு இடம்பெறும்.காலை 06.00 மணி கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – திரு.கதிர்காமத்தம்பி குடும்பம்

காலை |07.00 மணி |காலைப் பூசை


காலை 10.30 மணி |கும்ப புசை உருத்திரா அபிஷேகம் – க.துரைசிங்கம் குடும்பம் – கோவில்புதுக்குளம்

பகல் 12.00 மணி உச்சிக்காலப்பூசை


மாலை 03.30 மணி கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – கருணாநிதி குடும்பம் – நெளுக்குளம்

மாலை 05.00 மணி மாலைப் பூசை

மாலை 06.00 மணி முதலாம் யாம கும்ப பூசை அபிஷேகம் – வ/வெளிக்குளம் க.உ.வித்தியாலயம்.

இரவு | 08.30 மணி | பூசை சிவசகஸ்ரநாம அர்ச்சனை

இரவு 09.00 மணி | இரண்டாம் யாம உருத்திரா அபிஷேகம் – வ/விபுலானந்தா கல்லூரி, பண்டாரிகுளம்.

இரவு10.30 மணி | பூசை சிவசகஸ்ரநாம அர்ச்சனை

இரவு 11.00 மணி (மூன்றாம் யாம கும்பபூசை உருத்திரா அபிஷேகம் – வ/சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, வவுனியா.

இரவு12.15 மணி |இலிங்கோற்பவ பூசை – சிவபஞ்சாட்சர அஷ்டோத்திர நாம அர்ச்சனை

அதிகாலை 03.00 மணி நான்காம் யாம கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – வ/இந்துக்கல்லூரி.

04.30 மணி பூசை சகஸ்ரநாம அர்ச்சனை

05.00 மணி திருக்கதவடைத்தல்

காலை05.30 மணி திருவனந்தல்

காலை |06.00 மணி வசந்தமண்டப பூசை

காலை 06.30 மணி தீர்த்தம் – வ/பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயம்

காலை |07.00 மணி காலைப்பூசை

 

குறிப்பு:

  1. காலை 9.00 மணி முதல் அடியார்களுக்கு சமய தீட்சை வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
  2. லிங்கோற்பவருக்கான அபிஷேக காலத்தில் பால்குடம் எடுக்கும் அடியார்கள் தங்கள் பெயரை காரியாலயத்தில்முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.
  3. இரவு 6.00 மணிமுதல் மறுநாட்காலை 6.00 மணிவரை பஸ்வண்டிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

 

அடியார்கள் தங்களால் இயன்றளவு சரியைத் தொண்டுசெய்து, பூ, பூமாலைகள், பால், தயிர், இளநீர்

முதலியன கொடுத்து திருவருளை பெற்று உய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

கோவில்குளம் – வவுனியா.

 

இங்ஙனம்

ஆலய அறங்காவலர்கள்

024-2222651