யாழ்ப்பாணத்தில் காத்திருந்த மணமகள் : பிரான்ஸில் பரிதாபமாக உ யரிழந்த மணமகன்!!

600

காத்திருந்த மணமகள்..

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீரென உ யிரிழந்தமை அவரின் உறவினர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நாடு திரும்ப தயாராக இருந்த இளைஞனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழையை சேர்ந்த 29 வயதான பகீஸ்வரன் சாருஜன் என்ற இளைஞன் மூளை நரப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 15 ம் திகதி உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புகள் பிரான்ஸிலுள்ளவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் திடீரென ம யக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மூளைச் சா வு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பகீஸ்வரன் சாருஜன் தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவதாக ஏற்கனவே பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப் பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.

மூளைச் சாவடைந்த நிலையில், உறவினர்களுடன் அனுமதியுடன் பகீஸ்வரன் சாருஜன் கருணை கொ லை செய்யப்பட்டதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.