வவுனியாவில் ஒன்றுகூடிய வன்னி தேர்தல் மாவட்ட அரச அதிகாரிகள் : இராஜாங்க அமைச்சர் தலைமையில் கூட்டம்!!

356

வவுனியாவில்..

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாரிய பிரச்சனையாக காணப்படும் வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக கலந்துரையாடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக,

வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமல் வீர திஸாநாயக்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (18.02.2020) காலை 10 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

இதன் போது வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட காணிகள் , வனவள திணைக்களத்திற்கு உரித்தான காட்டுப்பகுதியில் மக்கள் குடியேறியுள்ளமை அதற்குரிய தீர்வு ,

மக்கள் வசிக்கும் காணிகளுக்கு வனவள திணைக்களம் எல்லையிட்டமை மற்றும் தேக்கு மரம் நாட்டியமை , மக்களின் பல வருடங்களாக வசிக்கும் பகுதியிகளை கையகப்படுத்தியுள்ளமை ,

வன்னி நிலப்பரப்பில் காணப்படும் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதிகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சில விடயங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதுடன் சிலவற்றிக்கு குழு அமைத்து கலந்துரையாடி தீர்வினை காணுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , சிவசக்தி ஆனந்தன் மற்றும் அபிவிருத்தி குழு தலைவர்கள்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்களத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர்,

மாவட்ட, பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.