நடிகர் கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உ யிர் த ப்பியது எப்படி? 3 பேர் பலியான கொ டூர விபத்தின் முழு பின்னணி!!

511

கமல், ஷங்கர், காஜல் அகர்வால்..

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை, காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் போன்றோர் எப்படி உ யிர் த ப்பினர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கமல், நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் இரவு சென்னையில், இருக்கும் ஈ.வி.பி பிலிம் இன்ஸ்டியூட்டில் நடைபெற்றது. அப்போது திடீரென்று அங்கிருந்த கிரேன் விழுந்ததால், இந்த விபத்தில் 3 துணை இயக்குனர்கள் பரிதாபமாக ப லியாகினர்.

இந்நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது? கமல், காஜல் அகர்வால், ஷங்கர் ஆகியோர் எப்படி உ யிர் த ப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதில், படப்பிடிப்பின் போது இரவு நேரத்தை பகல் போன்று வெளிச்சமாக்க, கிரேன் உதவியுடன் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. 40 அடி உயரம் கொண்ட கிரேனின் கைப் பகுதியில், ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

ராட்சத விளக்கின் கீழே, இந்தியன் 2 படத்தின் வசனக்காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதாவது புரட்சி செய்ய கிளம்பும் நடிகர் கமலுக்கு, நாயகி காஜல் அகர்வால் ஆ யுதம் கொடுக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டது.

படப்பிடிப்பு இடைவெளியின் போது, சரியாக இரவு 9 மணிக்கு திடீரென்று ராட்சத விளக்கு பொருத்தப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்துள்ளது. இந்த கிரேன் விழுந்ததில் சம்பவம் இடத்தில் கிருஷ்ணா, ம து, பாலச்சந்தர் ஆகியோர் நசுங்கி பலியாகினர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 2 அடி தூரத்தில் நின்ற கமல், அதிர்ஷ்டவசமாக உ யிர்தப்பினார். இதே போன்று விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 அடி தூரத்தில் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஷங்கர் ஆலோசித்து கொண்டிருந்ததால், அவரும் இந்த விபத்தில் இருந்து த ப்பினார்.

படப்பிடிப்பின் இடைவேளை என்பதால், நடிகை காஜல் அகர்வால், அங்கிருந்த 15 அடி தூரத்தில் இருந்த தன்னுடைய கேரவான் வாகனத்திற்கு விபத்து நடப்பதற்கு சில வினாடிகள் சென்றுவிட்டதால், அவர் உ யிர் தப்பினார்.

இந்த கொ டூர விபத்திற்கு முக்கிய காரணம், கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் வி சாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும்.