பருத்தித்துறையில் தரம் 8ல் பயிலும் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!!

656

Sadalamவடமராட்சி பிரதேசத்தில், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (13) என்ற பாடசாலை மாணவி நேற்று வியாழக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது பெற்றோர்கள் வெளியில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய வேளை மகள் சடலமாக இருப்பதினை அவதானித்துள்ளதுடன், அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறையிலுள்ள பிரபல பாடசாலையில் இவர் தரம் 8ல் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.