திமுகவில் இருந்து அழகிரி அதிரடியாக நீக்கம்!!

332

Alakiriதிமுகவில் இருந்து மு.க.அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில் இன்று அழகிரியே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

திமுக தென் மண்டல பொறுப்பாளராக உள்ள அழகிரிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வரும் நிலையில் தேமுதிகவுடன் கூட்டணிக்கு திமுக முயன்று வருகிறது.

ஆனால் அதைக் கெடுக்கும் வகையில் விஜய்காந்தைத் தாக்கி அழகிரி பேட்டி தந்தார். இதையடுத்து அழகிரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார் கருணாநிதி.

இந் நிலையில் அவரை கட்சியை விட்டே நீக்கியுள்ளது திமுக. அழகிரி தாற்காலிகமாக கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கட்சிக்கு எதிராக துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை அழகிரி விமர்சித்தார்.

தி.மு.க செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று அழகிரி கூறினார். இதனால், தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

குழப்பம் விளைவிக்க முயன்ற அழகிரி கட்சியில் நீடிப்பது முறையல்ல என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அன்பழகன்.