19 வகை சுவையூட்டிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்!!

625

health ministryஉணவுகளில் சேர்க்கப்பட்டும் 19 சுவையூட்டிகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி குறித்த சூவையூட்டிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது அவற்றை உற்பத்தி செய்யும் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து அது பாதுகாப்பானது மற்றும் தகுதியானது என உத்தரவாதமளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெறாமல் எந்தவொரு சுவையூட்டிகளையும் இறக்குமதி செய்யவோ, சந்தைப்படுத்தவோ, களு்சியப்படுத்தவோ பாவனைக்கு உட்படுத்தவோ, பகிர்ந்தளிக்கவோ, விற்பனை செய்யவோ, விளம்பரப்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

எலோயின், பர்பரின், பீடா- எசரோன் மற்றும் சினமயில் எந்திரக்சிலேட், கேட் ஒயில், கெலமசி ஒயில், கோகேன், கூமரின், எஸ்ரகோல், இயூஜிநைல் மீதைல் ஈதர், கைபரசீன், நைட்ரோ பென்சின், பைரோ லிஜீன் அசிட், சப்ரோல் மற்றும் ஐசோ சப்ரோல், சசாபிரஸ் ஒயில், தூஜோன், ஐசோ தூஜேன், டொன்கா பீன் உள்ளிட்ட 19 சுவையூட்டிகளே இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளன.