தந்தை இறந்தது கூட தெரியாமல் பரீட்சை எழுதிய மகள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

293

நெஞ்சை உருக்கும் சம்பவம்..

பேருந்து விபத்தில் தந்தை இ றந்தது கூட தெரியாமல் கேரளாவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தேர்வெழுதியுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டத்தின் புறநகரில் வெலியநாடு என்ற சிறிய கிராமத்தில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு படித்து வருபவர் மாணவி பவிதா பைஜு.

இவர் நேற்று காலை மாதிரி தேர்வுக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு தெரியாது, அதே நேரத்தில் நடத்த ஒரு கோர விபத்தில் அவருடைய தந்தை உ யிரிழந்துவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 3.15 மணியளவில் எர்ணாகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, லொறி மீது மோதி விபத்தில் சிக்கியது.

பேருந்தில் பயணித்த 50 பயணிகளில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தனர். இதில், பவிதாவின் தந்தை, 47 வயதான வி.ஆர்.பைஜுவும் உ யிரிழந்துள்ளார்.

பைஜு போக்குவரத்துக் கழகத்தில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையேயான தடத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.

குறித்து வீட்டிற்கு தகவல் கிடைத்தாலும், பவிதா தேர்வுக்கு சென்றுகொண்டிருந்ததால் அதனை பற்றி குடும்பத்தினர் அவரிடம் தெரிவிக்கவில்லை.

இதனால் தேர்வுக்கு சென்ற பவிதா, மாலை 5 மணிக்கு பின்னரே தந்தை விபத்தில் இ றந்தது குறித்து கேட்டறிந்து அ திர்ச்சியடைந்துள்ளார்.