குவைத்தில் இலங்கை பெண் தற்கொலை : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தல்!!

716

Foreignகுவைத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மரணம், தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

வீட்டுப் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருந்த பெண்ணொருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பென் குவைத் நாட்டில் பணிப்புரிந்து வந்த பங்களாதேஷ் பிரஜையை திருமணம் செய்திருந்ததாகவும் குடும்ப பிரச்சினை காரணமாக அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் எனவும் ரந்தெனிய கூறினார்.