வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் அறிக்கையிடல் பயிற்சிப் பாசறை!!

366

ஊடகவியலாளர்களுக்கு..

வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தொடர்பான பயிற்சிப் பாசறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (22.02.2020) காலை 8.30 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அதனை எவ்வாறு அறிக்கையிடுவது என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்டர் நியூஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப் பயிற்சிப் பாசறை இடம்பெறுகின்றது.

குறித்த பயிற்சி பாசறை இன்றும் (22.02) நாளையும் (23.02) காலை 8.30மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறுகின்றது.

ஒய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் எல்.எம்.மொஹமட் வளவாளராக கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான சட்டங்கள், கு ற்றச்செயல்களின் த ண்டனைகள், வழிகாட்டு நெறிகள், பாராளுமன்றை கலைப்பதில் உள்ள சிக்கல்கள், ஆரம்ப கால நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இப் பாசறையில் திருகோணமலை , அம்பாறை , கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா உட்பட வடக்கு கிழக்கினை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.