சமந்தாவுக்கு இரகசிய சிகிச்சை!!

558

Samanthaசரும ஒவ்வாமை நோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு சென்னையில் இரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நோய் காரணமாக சமந்தா பல பெரிய பட வாய்ப்புகளை கடந்த ஆண்டு இழந்தார். எனவே முற்றாக குணப்படுத்த ஹைதராபாத்தில் வெளிநாட்டு மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெற்றார்.

ஆனால் மீண்டும் முகத்தில் பெரிய பருக்களும் உடலில் சில மாற்றங்களும் ஏற்பட்டதால் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையை மாற்றிவிட்டாராம் சமந்தா.

அஞ்சான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி சென்னைக்கு வந்த சமந்தா ஒரு தனியார் மருத்துவமனையில் இரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறாராம்.