விபத்தில்..

ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (23.02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தொன்றும், மோட்டார் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது விபத்தில், காந்தி திஸாநாயக்க வயது-56 மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




