கொரோனா வைரஸ்..
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அ பாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய தினம் காலை வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தென்கொரியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உ யிரிழந்துள்ளனர். தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென் கொரியாவில் வசிக்கின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், இலங்கையில் வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்காக தென்கொரியாவில் இருந்து வருகை தரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அத்துடன், அவர்கள் 14 நாட்களுக்கு அவதானிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.