நடிப்புக்கு விடைகொடுக்கத் தயாராகும் நஸ்ரியா!!

526

Nasriyaதிருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக நஸ்ரியா திட்டமிட்டுள்ளதாக மலையாள பட உலகில் செய்தி பரவி உள்ளது.

நேரம், ராஜாராணி, நய்யாண்டி போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசிலை மணக்கிறார். இவர் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.

இருவரும் மலையாள படமொன்றில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். இரு வீட்டு பெற்றோரும் இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டார்கள். ஆகஸ்டில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நஸ்ரியா தற்போது திருமணம் எனும் நிக்கா, வாயை மூடி பேசவும் என்ற இரு தமிழ் படங்களிலும் ஓம்சாந்தி ஓசனா ஹேர்ஐர் ஆம் டானி என்ற மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணத்துக்கு முன் இப்படங்களை முடித்து விடும்படி பகத் பாசில் குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளார்களாம்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று பகத் பாசிலும் அவரது உறவினர்களும் கூறி உள்ளார்களாம். நஸ்ரியாவும் இதை ஏற்றுக் கொண்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மலையாள நடிகைகள் பலர் திருமணத்துக்கு பிறகு நடிக்கவில்லை.

கணவனை பிரிந்தவர்களும் விவாகரத்து ஆனவர்களும் தான் மீண்டும் நடிக்க வருகிறார்கள். நஸ்ரியாவுக்கு புது படவாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எந்த படத்தையும் அவர் ஏற்கவில்லை.

திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா அல்லது சினிமாவை விட்டு விலகுவீர்களா என்று நஸ்ரியாவிடம் கேட்டபோது பகத் பாசில் எனக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு நான் படங்களில் நடிப்பேனா என்று தெரியவில்லை. கைவசம் உள்ள படங்களை முடித்து கொடுத்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்றார்.