மன்னாரில் வாகனத்தில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட க ஞ்சா பொதிகள் மீட்பு!!

486

வாகனத்தில்..

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் சோ தனைச் சாவடியில் வைத்து ஒரு தொகுதி க ஞ்சா பொதிகளுடன் ஒருவர் நேற்று மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் வாகனத்தின் முன் பகுதியில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட 12 கிலோ 640 கிராம் எடை கொண்ட க ஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குஞ்சுக்குளம் சோ தனைச் சாவடியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக பொலிஸார் குறித்த வாகனத்தை ம டக்கி பி டித்து சோ தனைக்கு உட்படுத்திய போது குறித்த க ஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது கைப்பற்றப்பட்ட க ஞ்சா பொதிகள்,வாகனம் ,கைது செய்யப்பட்ட நபர் மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்,விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.