எண்பதாண்டு தமிழ் சினிமாவில் கோடம்பாக்கத்தில் குவிந்த கவர்ச்சி கன்னிகள் கணக்கிலடங்காது. அவர்களில் கோலோச்சிய கவர்ச்சி ராணிகள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணி விடலாம்.
சிலுக்குக்கு முன் சிலுக்குக்கு பின் என்று காலத்தை பிரிக்கிற அளவுக்கு கவர்ச்சியை பிரித்து மேய்ந்த நடிகைகள் வாரா வாரம் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆரவாரம் எந்தளவுக்கு இருக்கிறது..
சம்பந்தப்பட்ட கவர்ச்சி நடிகைகளின் போஸ்டரை மாடு தின்கிற நேரத்தில் அவர்களது மார்க்கெட்டும் க்ளோஸ் ஆகிவிடுகிறதே, அந்தளவுக்குதான்.
சில்க் வாழ்ந்த காலம் குறைவு என்றாலும், அவரது அழகுக்கு இன்னும் இன்னும் ஆயுள் இருப்பது போல, சிலரை மட்டுமே வாம்மா மின்னலு என்று அழைக்கிறார்கள் கவர்ச்சிக்கெனவே காத்திருக்கும் இரசிகர்கள்.
அப்படி வந்தவர்தான் நமீதா. இவரது சகாப்தம் முடிவடைந்துவிட்டதா, இல்லையா என்பதை அவர் இனிமேல் எடுக்கப் போகும் முடிவுகள்தான் சொல்ல முடியும்.
ஆனால் அதற்குள் நான்தான் நமீதாவின் இடத்தை பிடிப்பேன் என்று களத்தில் குதித்திருக்கிறார் நடிகை நித்யா.
சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தில் வயசான கணவருக்கு வாழ்க்கை பட்டு கட்டுமஸ்தான இளைஞர்களை பார்த்து ஏக்க பெருமூச்சும், எக்கச்சக்க அனல்மூச்சுமாக ஒருவித தவிப்போடு நடித்திருக்கிறார் நித்யா.
மனசில் வருங்கால நமீதா தான்தான் என்கிற நம்பிக்கை இருக்கிறதாம் இவருக்கு. இந்த படம் மட்டும் வரட்டும். அப்புறம் பாருங்க, நமீதாவை தேடி போறவங்க என்னை தேடி வர்ற மாதிரி ஆகுதா இல்லையான்னு என்கிறார்.
ஒரு சீனியர் நடிகையை, இப்பவும் மார்க்கெட்டில் கவர்ச்சிக்கென பட்டா போட்டிருக்கும் ஒரு நடிகையை பற்றி இப்படியா அப்பட்டமாக சொல்வீங்க என்றால், அதற்கு அவர் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. நமீதா சீசன் முடிஞ்சுருச்சு. இனி என்னோட சீசன்தான். இதை நிருபித்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார்.





