இலங்கையின் சில பிரதேசங்களில் மின்சார விநியோகத்தடையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம்!!

458

மின்சார தடை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சில மின்சார நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இலங்கை மின்சார சபை சில பிரதேசங்களில் மின்சார விநியோகத்தடையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேற்குக்கரை மின்சார மையம், மாத்தறையில் உள்ள மின்சார மையம் மற்றும் துல்ஹிரிய மத்துவம, கொலன்னாவ மின்சார பரிவர்த்தனை நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் இதன் காரணமாக முழுமையாக மின்சார விநியோகம் தடைப்படவில்லை என்றும், நேரத்துக்கு நேரம் துண்டிக்கப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.